இரண்டு புதிய தேசிய வனப்பூங்காக்கள் நாளை பிரகடனம்

Report Print Aasim in அரசியல்

இரண்டு புதிய தேசிய வனப்பூங்காக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் நாளைய தினம்(14) வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கிராமங்களில் புகுந்து அட்டகாசம் விளைவிக்கும் யானைகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசாங்கம் வனப்பூங்காக்களை நிர்மாணித்து வருகின்றது.

அந்த வகையில் பின்னவலைக்கு அடுத்ததாக ரிட்டிகல பிரதேசத்தில் இலங்கையின் இரண்டாவது யானைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை அதனை ரிட்டிகல-யான்ஓய வனப்பூங்காவாக மாற்றம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிட அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

அதே போன்று ஹொரவப்பொத்தானை வனப்பூங்காவின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டு அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் நாளை வெளியிடப்படவுள்ளது.

இதன் மூலம் வடமேல், வடமத்திய மற்றும் வடமாகாணங்களில் யானைகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.