பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர!

Report Print Aasim in அரசியல்

பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி முன்னிலையில் இன்று காலை அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இதன் போது ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவும் சமூகமளித்துள்ளார்.

தற்போதைக்கு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகிக்கும் ஈவா வனசுந்தர, முதற்தடவையாக பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நாளை முதல் அவர் பதில் பிரதம நீதியரசராக கடமையாற்றுவார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளது.