கொழும்பில் போக்குவரத்து நெரிசலை அறிந்துக் கொள்ள புதிய அப்ளிகேசன்

Report Print Aasim in அரசியல்

கொழும்பில் போக்குவரத்து நெரிசல் மற்றும் தடங்கல்களை அறிந்துக் கொள்வதற்கான புதிய மொபைல் அப்ளிகேசன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சு மற்றும் மொரட்டுவைப் பல்கலைக்கழகம் என்பன இணைந்து இந்த மொபைல் அப்ளிகேசனை உருவாக்கியுள்ளன.

இந்த அப்ளிகேசன் முன்னதாக பரீட்சார்த்த முறையில் செயற்படுத்திப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தரவிறக்கம் செய்து கொண்டால் கொழும்பின் எந்தெந்தப் பாதைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது? மாற்றுப் பாதை எது என்பது போன்ற தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடிகளிலிருந்து தவிர்ந்து கொள்வதுடன் மனிதர்களின் உழைப்புக்கான நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ளவும் முடியும் என்றும் அமைச்சர் சம்பிக ரணவக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.