ஐ.நா. உரை தொடர்பில் அமைச்சரவையில் மைத்திரி விளக்கம்

Report Print Rakesh in அரசியல்

அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 26ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 17ஆம் திகதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதனால், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தாமல் ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் மேற்படிக் கூட்டத்தை நடத்த நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்துக்குச் செல்வது மற்றும் அந்த விஜயம் குறித்து ஜனாதிபதி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது சிறிய விளக்கமொன்றை அமைச்சர்களுக்கு வழங்கியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.