அரசியலமைப்புக்குள் ஐ.நா மனித உரிமைகள் சாசனத்தை உள்ளீர்க்க இலங்கை இணக்கம்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய அரசியலமைப்புக்குள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சாசனத்தை உள்ளீர்க்க இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளதாக டென்மார்க் தகவல் வெளியிட்டுள்ளது.

டென்மார்க்கின் நாடாளுமன்ற உறுப்பினர் ட்ரோல்ஸ் ராவின்ஸ் மற்றும் டென்மார்க்கின் சோஷலிஸ ஜனநாயக கட்சியின் நிறைவேற்று உறுப்பினர் தர்மகுலசிங்கம் ஆகியோர் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தனர்.

அவர்கள் இருவரும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து இந்த இணக்கத்தைப் பெற்றுக்கொண்டதாக தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் கல்வித் திட்டத்திலும், மனித உரிமை சாசனம் உள்வாங்கப்படும் என்ற விடயமும் தம்மால் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.