நினைவுப் பரிசுகள் வேண்டாம் : பிரதமர் அறிவுறுத்தல்

Report Print Aasim in அரசியல்

தான் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் எதுவிதமான நினைவுப் பரிசில்களும் தனக்கு வழங்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

பிரதம அதிதியாக தான் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் தனக்கு எந்தவொரு நினைவுப் பரிசும் வழங்க வேண்டாம் என்று ஏற்பாட்டாளர்களுக்கு உடனடியாக அறிவுறுத்துமாறு பிரதமர் தன் அலுவலக அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அவ்வாறான நினைவுப் பரிசில்களுக்காக செலவிடும் பணத்தை நன்மை தரும் காரியங்களுக்குப் பயன்படுத்துமாறும், அவ்வாறு செய்யப்பட்டால் அதனை தனக்கும் அறியத்தருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன் மூலம் தனது பேச்சின் இடையே விழா ஏற்பாட்டாளர்களின் சமூக நல செயற்பாடு குறித்து நன்றி தெரிவிக்கும் வகையில் ஒன்றிரண்டு வார்த்தைகளை சேர்த்துக் கொள்ள முடியும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான தனியான அறிவுறுத்தல் கடிதமொன்றை தான் கலந்து கொள்ளும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பிவைக்குமாறும் பிரதமர் தனது அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.