எந்தவொரு அமைச்சரும் அரசாங்கத்தை விட்டு விலகுவதாக அறிவிக்கவில்லை?

Report Print Aasim in அரசியல்

ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது எந்தவொரு அமைச்சரும் அரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக அறிவிக்கவில்லை என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுதந்திரக்கட்சி அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று கடந்த 12ஆம் திகதி இரவில் நடைபெற்றிருந்தது.

இதன்போது பெருமளவான அமைச்சர்கள் தாம் அரசாங்கத்திலிருந்து விலகும் முடிவை ஜனாதிபதிக்கு அறிவிப்பார்கள் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.

இந்நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அவ்வாறு எந்தவொரு அமைச்சரும் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவ்வாறு விலகுவதாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சர்கள் அனைவரும் எதிர்வரும் தேர்தல்களின் ​போது சுதந்திரக்கட்சியின் வெற்றிக்கான யோசனைகளை முன்வைத்தும், அது தொடர்பான பொறுப்புகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதி அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் அருந்திக பெர்னாண்டோ தொடர்ந்தும் சுதந்திரக் கட்சியிலேயே இருப்பதாகவும் அமைச்சர் தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.