இலங்கைக்கான நிதியுதவிகளை இடைநிறுத்தும் ட்ரம்பின் யோசனை தோல்வி

Report Print Aasim in அரசியல்

இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை பெருமளவில் குறைக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்த யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நிதியுதவிகளில் 92 வீதத்தை இரத்துச் செய்யும் வகையில் ட்ரம்ப் தனது பிரேரணையை அமெரிக்க செனட் சபையில் முன்வைத்திருந்தார். ஆனால் செனட் சபை குறித்த பிரேரணையை முற்றாக நிராகரித்துள்ளது.

கடல்சார் நடவடிக்கைகளில் இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருப்பதால் ட்ரம்பின் பிரேரணையை நிராகரிக்க நேர்ந்துள்ளதாக செனட் சபை விளக்கமளித்துள்ளது.

இலங்கையின் ஜனநாயக மறுசீரமைப்பு, நல்லிணக்கம் போன்ற செயற்பாடுகளுக்காக 43மில்லியன் டொலர்களை நிதியுதவியாக அமெரிக்க செனட் சபை ஒதுக்கியுள்ளது. அதில் 92 வீதமான நிதியுதவியை இடைநிறுத்த ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சியே இவ்வாறு தோல்வியில் முடிவடைந்துள்ளது.