கட்சியை விமர்சனம் செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையோ அல்லது அதன் தலைமையையோ விமர்சனம் செய்யும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கட்சியையும், தலைவர் மைத்திரிபால சிறிசேனவையும் பகிரங்கமாக விமர்சனம் செய்யும் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் நேற்று கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அவர் மேலும் கூறுகையில்,

கட்சியின் உறுப்பினர்கள் நீக்கப்படுவது வெறுமனே மேற்கொள்ளப்படாது.

பணி நீக்கப்பட்ட பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் பதவி வெற்றிடத்திற்கு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

இந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

அருந்திக்க பெர்னாண்டோ அல்லது கட்சியின் வேறு எவரும் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்படுவது கட்சியின் எதிர்கால பயணத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

advertisement