அமெரிக்காவிற்கு சாதகமாக தொழில் சட்டங்கள் திருத்தப்படுவதாக குற்றச்சாட்டு

Report Print Kamel Kamel in அரசியல்

அமெரிக்காவிற்கு தேவையான வகையில் தொழில் சட்டங்கள் திருத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடி பணிந்து இலங்கையில் தொழில் சட்டங்களை திருத்தி அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச் சேவை சேவையாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் சட்டங்களை திருத்தி அமைப்பதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளை ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.