பிரித்தானிய பாராளுமன்றத்தில் எதிரொலித்த இலங்கையின் போர்க்குற்றம்

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னாள் இராணுவத் தளபதி ஜனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கருத்தாடல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கலந்துரையாடலொன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

புலம்பெயர்ந்த அமைப்பு ஒன்றினால் கடந்த வாரம் நடத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில் பிரித்தானியாவின் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும், சர்வதேச மனித உரிமைகள் சார்ந்த நிபுணர்களும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதன்போது காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படுவதுடன், காணாமல் போனமைக்கான பொறுப்பாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற விடயமும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.