அரசியல் கட்சிகளின் முரண்பாட்டினால் அரசியலமைப்பு தாமதம்?

Report Print Aasim in அரசியல்

அரசியல் கட்சிகளின் முரண்பாடான நிலைப்பாடுகள் காரணமாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

புதிய அரசியலமைப்பின் நகல் சட்டமூலம் எதிர்வரும் 21ம் திகதியளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் நாடாளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட இருந்தது.

எனினும் அரசியல் கட்சிகளுக்கிடையே நிலவும் கருத்து முரண்பாடுகள் காரணமாக புதிய அரசியலமைப்பின் சரத்துகள் தொடர்பிலான கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசியலமைப்பு உருவாக்கமும் தாமதமாகியுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே இதில் முக்கியமான கருத்து வேறுபாட்டுக்கான காரணியாக உள்ளது. குறைந்த பட்சம் இது தொடர்பாக சுதந்திரக் கட்சி கூட இதுவரை தனது நிலைப்பாட்டை வௌிப்படையாக அறிவிக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. போன்றனவும் பல்வேறு சரத்துகள் தொடர்பில் தங்கள் நிலைப்பாட்டை வெளியிடாமல் இழுத்தடிப்பை மேற்கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.