புதிய அரசாங்கம் தொடர்பில் நாமலின் குற்றச்சாட்டு

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டின் அபிவிருத்திப் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், புதிய அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமது அரசாங்க ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களும் தற்போது ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும், இந்த அரசாங்கம் அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்துவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

advertisement