பேசிக்கொண்டிருக்காமல் செயலில் ஈடுப்படுங்கள்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கைக்கு அறிவுரை

Report Print Ajith Ajith in அரசியல்

2015 ஆம் ஆண்டு இணங்கிக்கொள்ளப்பட்ட யோசனையை உரியமுறையில் செயற்படுத்த இலங்கைக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அழுத்தம் கொடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

ஜெனீவாவில் வைத்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தாம் மேற்கொள்வதாக உறுதியளித்த நான்கு கட்ட நீதிப்பொறிமுறைகளை முன்னோக்கி நகர்த்தவேண்டும் எனவும் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

இலங்கையில் நல்லிணக்க அலுவலகங்களை அமைப்பதனால் 2015 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் யோசனை அமுல்செய்யப்படுகிறது என்று எடுத்துக்கொள்ளமுடியாது என்பதை அரசாங்கங்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் உணரவேண்டும் என கண்காணிப்பகத்தின் ஆசிய நிலை பணிப்பாளர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுத்தமைக்கான ஆதாரங்களின் அடிப்படையில் யோசனையின் நடைமுறை அமையவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையின் அதிகாரிகளும் வெறுமனே மனித உரிமைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் பணிகளை செய்துக்காட்டவேண்டும் எனவும் கங்குலி கோரியுள்ளார்.