கொடுப்பதை வைத்துக்கொண்டு தமிழர்கள் இருக்க வேண்டுமா? சீ.வி சீற்றம்

Report Print Shalini in அரசியல்

கொடுப்பதை வைத்துக்கொண்டு தமிழர்கள் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்க தேரர்களுடனான சந்திப்பு குறித்து நேற்று தெளிவுபடுத்தும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்ககையில்,

தமிழர்களின் அரசியல் தொடர்பில் சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் இல்லை. கொடுப்பதை வைத்துக்கொண்டு தமிழர்கள் இருக்க வேண்டும் என்றே இன்னும் கருதுவதாக குறிப்பிட்டார்.

இந்த நிலைப்பாட்டை மாற்றுவதற்கு கடுமையாக முயற்சிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்க தேரர்களுடனான சந்திப்பில் முக்கியமான மாநாயக்க தேரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

“சமஸ்டி” என்றால், இலங்கைக்கு எதிரானது, பிரிவினைவாதம், மற்றும் நாட்டை துண்டாடி விடும் என்ற தீர்மானத்தில் இருக்கின்றார்கள்.

இதன்மூலம் சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் நிலைப்பாடு வெளிப்படையாக தெரிகின்றது.

அரசியல் தீர்வு குறித்து பேசும் போது ஒற்றையாட்சியை குறிப்பிடுகின்றனர். ஆனால் அந்த ஒற்றையாட்சியில் தமிழர்களின் தீர்வு குறித்து சிந்திப்பதாக தெரியவில்லை என்றும் குற்றம் சுமத்தினார்.

இதன்மூலம் கொடுப்பதை வைத்துக்கொண்டு தமிழர்கள் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடே இருப்பதாகவும், இதை மாற்றுவதற்கு கடினமாக முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.