ரஞ்ஜனுடன் மோதும் நாமல்! ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Report Print Shalini in அரசியல்

நாட்டிலுள்ள பௌத்த பிக்குகளையும், நீதித் துறையையும் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க கண்மூடித்தனமாக விமர்சனம் செய்து சட்டத்தை கையில் எடுத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

தற்பொழுதுள்ள அமைச்சர்கள் சட்டத்தை கையில் எடுத்து கொண்டு செயற்படுகின்றார்கள், அதுமட்டுமல்லாது பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க “முடியுமானால் என்மீது வழக்கு தொடுத்து சிறையில் போடுமாறும்” சவால் விடுத்துள்ளார்.

நீதித்துறையை நிந்தனை செய்யும் போது நீதித்துறைக்குள்ள கௌரவமும், மகிமையும் இல்லாமல் போகின்றது. அதனையே அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதில்கூற வேண்டும் என குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த காரணத்தினாலேயே விஜயதாச ராஜபக்ஸ மற்றும் அருந்திக பெர்னான்டோவை பதவியிலிருந்து நீக்கியுள்ளனர்.

இதன்மூலம் பயமுறுத்தி, அச்சுறுத்தி ஆட்சியை முன்னெடுத்து செல்ல இந்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.