அரசாங்கத்தை கவிழ்க்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: அருந்திக பெர்னாண்டோ

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்வரும் காலங்களில் எடுக்க முடிந்த சகல நடவடிக்கைகளையும் எடுக்க போவதாக முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தன்னை பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இரண்டு கட்சிகளிலும் நல்லவர்கள் இருக்கின்றனர். ஜனாதிபதி மீது அதிருப்தியில்லை. அரசாங்கத்தின் மீதே அதிருப்தி உள்ளது.

நாட்டு மக்கள் தொடர்பில் சிந்தித்து கொள்கை ரீதியான முடிவை எடுத்தேன். அரசாங்கம் சில விடயங்கள் தொடர்பில் தவறான நடவடிக்கைகளை கையாள்கிறது. இதனால், அதனை விமர்சித்தேன். அதில் எந்த தவறுகளும் இல்லை.

இரண்டாக பிளவுப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைத்து எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த கனவு கண்டுக்கொண்டிருக்கின்றனர்.

ஜனாதிபதியுடன் நேற்று வைபவத்தில் கலந்து கொண்டதால், அரசாங்கம் கவிழாது என்று கூற முடியாது.

அத்துடன் மீண்டும் அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்வேன் என்று அர்த்தமாகாது எனவும் அருந்திக பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.