பௌத்த பிக்குகளை அவமதிக்கும் அமைச்சர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

பௌத்த பிக்குமாரை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக தாய் நாட்டை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பௌத்த பிக்குகளுக்கும், நாட்டுக்கு எதிரான சக்திகளுக்கும் எதிராக குரல் கொடுக்குமாறு பௌத்த சங்க நாயக்கர்களுக்கு அழைப்பு விடுகின்றோம்.

பௌத்த பிக்குமார் தற்போது நிந்திக்கப்படுவதை போல்,எந்த காலத்திலும் நிந்திக்கப்படவில்லை. நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்கள் இது சம்பந்தமாக தொடர்ந்தும் அமைதிகாத்து வருகின்றனர்.

பௌத்த பிக்குமார் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து கருத்துக்களை முன்வைப்பது, ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் பெரும் வேதனையாக மாறியுள்ளது.

மேலும்,பௌத்த பிக்குகள் நிந்திக்கப்படுவதும், அவமதிக்கப்படுவதும் தொடருமானால் நாம் பொருத்தது போதும்.

தற்போதைய அரசாங்கத்தை விரைவில் ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தாது போனால் நாடும், இனமும் எஞ்சியிருக்காது என முருத்தொட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.