20ஆவது திருத்தச்சட்டத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை! முதலமைச்சர் ஏன் நிராகரிக்கின்றார்?

Report Print Sumi in அரசியல்

20ஆவது திருத்தச்சட்டத்தில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆனால் மாகாண சபைகளில் பாரிய தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்று கூறுவதை ஏற்க முடியாது என வடமாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

20ஆவது திருத்தச்சட்டத்தின் படி அனைத்து மாகாண சபை தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவதற்கு நாடாளுமன்றம் தீர்மானிக்கும்,

நடைமுறையில் இருக்கும் மாகாணசபைகளில் கடைசிக்காலத்தில் இருக்கும் திகதிக்கு முன் ஒரு திகதியை நாடாளுமன்றம் தீர்மானிக்கும்.

அவ்வாறு தீர்மானிக்கும் திகதிவரை தற்சமயம் இருக்கும் மகாணசபை உறுப்பினர்கள் தொடர்ந்து இருப்பார்கள் என தெளிவுபடுத்தினார்.

அதற்கு முன் ஆளுநர் மாகாண சபையை கலைக்க வேண்டுமானால் முதலமைச்சரின் சிபாரிசின் பேரில்தான் கலைக்க வேண்டும் என 20ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இதில் 3 குறைப்பாடுகள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். 20ஆவது திருத்தச்சட்டம் 2 பக்கங்களே, வேறு ஒன்றும் பெரிதாக இல்லை எனவும் அறிவித்துள்ளார்.

இதை முதலமைச்சர் ஏன் நிராகரிக்கின்றார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.