கிழக்கு உட்பட மூன்று மாகாண சபைகளின் தேர்தல் 2018 மார்ச்சுக்கு முதல்

Report Print Ajith Ajith in அரசியல்

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களின் தேர்தல்கள் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்ற தேர்தல்களையும் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற மாகாண சபை தேர்தல்களின் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் ஆயுட்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.