ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா?

Report Print Thamilin Tholan in அரசியல்

ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தரும் போது நாம் அவருக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் 13 ஆம் திகதி நடைபெற இருக்கும் போராட்டத்திலேயே தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

13ஆம் திகதி அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆளுநரின் அலுவலகத்தில் ஒரு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும்.

சுமார் 20 அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளன.

அந்த போராட்டத்தில் சாதகமான முடிவு எட்டப்படாத நிலையில் 14ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ். வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தமிழ் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழா எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் யாழ்.இந்து கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

இந்த நிலையில் 13ஆம் திகதி எமது போராட்டத்திற்கு தீர்வு கிடைக்காவிடின், அரசியல் கைதிகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிடின் இந்த நிகழ்வை புறக்கணிக்கமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.