பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் தவறான தெளிவூட்டல்கள்!

Report Print Jeslin Jeslin in அரசியல்

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தவறான புரிந்துணர்வுகளை ஏற்படுத்த சிலர் பல வேலைதிட்டங்களை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் பைசர் முஸ்தப்பா குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, புதிய அரசியலமைப்பு முறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்தே இவ்வாறான தவறான தெளிவூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.