ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Steephen Steephen in அரசியல்

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, அவரை எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்கள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர் மாகல்கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஆகியோர் இந்த மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.