நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மீது தாக்குதல்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Report Print Kumar in அரசியல்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேற்று(11) நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்க முனைந்தபோது தடுக்க முனைந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தன்மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது தொடர்பில் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டுள்ளார்.