சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்படும் முக்கியஸ்தர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமார வெல்கம, மகிந்தானந்த அளுத்கமகே, விதுர விக்ரமநாயக்க உட்பட 5 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட உள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய அமைப்பாளர்களுக்கான நியமனத்தை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குமார வெல்கம, மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் இருந்து கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு, சுதந்திரக்கட்சியின் தலைமைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.