முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்ந்துள்ள வழக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ரோஹித்த அபேகுணவர்ன 412 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணத்தை தவறான முறையில் சம்பாதித்தார் என்ற குற்றச்சாட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது தமது சிரேஷ்ட சட்டத்தரணி முறிப்பத்திர விவகாரம் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவில் விசாரணைகளுக்காக ஆஜராகியுள்ளதால், வழக்கு வேறு தினத்தில் விசாரணைக்கு எடுக்குமாறு பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி கேட்டுக்கொண்டார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன வழக்கை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.