மத்திய வங்கி பிணை முறி விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாட்சியமளிப்பதை மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்று மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த ஆணைக்குழுவில் உண்மையான குற்றவாளிகள் சாட்சியமளித்தனரா என்பது இன்னும் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் கபீர்ஹாசிம் மற்றும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் ஆணைக்குழுவில் முன்னிலையானபோது அவர்களிடம் விசாரணைகள் வித்தியாசமாகவே நடத்தப்பட்டன.
அவர்களிடம் குறுக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மஹிந்தாநந்த குற்றம் சுமத்தியுள்ளார்.