புதிய அரசியலமைப்பிற்கு பௌத்த பிக்குகளின் ஆசி வேண்டும்

Report Print Kamel Kamel in அரசியல்

புதிய அரசியல் அமைப்பிற்கு பௌத்த பிக்குகளின் ஆசி அவசியம் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பினை உருவாக்குவதற்கு ஆசி அளிக்க வேண்டுமென மாநாயக்க தேரர்களிடம் வேண்டிக்கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் அவசியம் எதுவும் கிடையாது எனவும், அவ்வாறான திட்டங்கள் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு பங்களிப்பினை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருநாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.