யாழ்.பொது நூலகத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்

Report Print Thamilin Tholan in அரசியல்

உண்மைத்தன்மை, நீதி, இழப்பீடு ஆகியவற்றை ஊக்குவித்தல் மற்றும் மீள நிகழாமைக்கு உத்தரவாதமளித்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை யாழ்ப்பாணம் சென்ற பப்லோ டி கிரிப் யாழ்.பொது நூலகத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது நல்லிணக்கம் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் சிலர் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரை சந்தித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.