ஜே.வி.பி சேறுபூசல்களுக்கு அடங்காது

Report Print Steephen Steephen in அரசியல்

வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலர் மக்கள் விடுதலை முன்னணியையும் அதன் இணை அமைப்புகளான ஊழல் மோசடிகளை வெளியிட்டு வரும் சங்கங்களையும் சேறுபூசி அழிக்க முயற்சித்து வருவதாக அந்த முன்னணியின் வடமத்திய மாகாண உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ராஜபக்சவின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாது நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்த மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அதன் தொழிற்சங்கங்கள் மீது சேறுபூசும் தாக்குதல்களை தொடுத்து அவற்றின் பணிகளை முடக்கி விட முடியாது.

எதிர்காலத்திலும் இப்படியான சேறுபூசும் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.