உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக தேசிய ஐக்கிய முன்னணியின் ஒன்றுகூடல்

Report Print Navoj in அரசியல்

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஏறாவூரில் தேசிய ஐக்கிய முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டம் நேற்று இரவு கட்சியின் ஏறாவூர் அமைப்பாளர் எம்.ரஹ்மான் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபைகளுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பாகவும், வட்டார தேர்தலில் கட்சி கூடிய ஆசனங்களை பெறுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கலந்துரையாடலில் தேசிய ஐக்கிய முன்னணியின் கொள்கை பரப்பு செயலாளர் தாஹா மௌலானா, தேசிய ஐக்கிய முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எச்.எம்.நிஜாம்தீன், கல்குடா அமைப்பாளர் எம்.எச்.ஆஷிக், இளைஞர் அமைப்பாளர் ஏ.எஸ்.அறூஸ், தேசிய ஐக்கிய முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவுக்கு பொறுப்பான எம்.நளீம் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.