ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச அமைப்பாளராக ரகுபதி நியமனம்

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்டத்தின், பொத்துவில் தொகுதியிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச கட்சி அமைப்பாளராக கணேசபிள்ளை ரகுபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமன கடிதம் நேற்று மாலை கொழும்பு, கோட்டையிலுள்ள பழைய ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவர் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவராக இருந்து பல சேவைகளை மக்களுக்கு செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.