வட மாகாண ஆளுநரைச் சந்தித்த ஐ.நாவிற்கான விசேட அறிக்கையிடும் அதிகாரி தலைமையிலான குழு

Report Print Thamilin Tholan in அரசியல்

ஐ.நாவிற்கான விசேட அறிக்கையிடும் அதிகாரி பப்லோ டி கிரீஸ் தலைமையிலான குழுவினர் இன்று பிற்பகல் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், மக்களின் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அனைத்து மக்களும் சமமாக வாழ்வதற்கு அரசு முன்னெடுத்துவரும் பணிகள் தொடர்பிலும் ஆளுநர் ஐ.நா பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.