குட்டரஸ்ஸை சந்தித்தார் சந்திரிக்கா

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலர் அன்டனியே குட்டரஸை சந்தித்துள்ளார்

நியூயோர்க்கில் வைத்து இந்த சந்திப்பு அண்மையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவர் என்ற அடிப்படையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக சந்திரிக்காவின் அலுவலகம் தெரிவித்துள்ளது

இதன்போது இலங்கையில் தமது அலுவலகம் மேற்கொண்டு வருகின்ற நல்லிணக்க பணிகள் குறித்து சந்திரிக்கா, ஐக்கிய நாடுகளின் செயலருக்கு விளக்கமளித்துள்ளார்.