சட்டத்திற்கு அரசியல் கட்சிகள் என்பது முக்கியமல்ல

Report Print Steephen Steephen in அரசியல்

சட்டத்தின் செயற்பாடுகளுக்கு அரசியல் கட்சிகள் முக்கியமல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குருணாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அடுத்த சில நாட்களில் நியமிக்கப்படும் புதிய ஆணைக்குழுவின் ஊடாக ஊழல், மோசடிகள் தொடர்பாக மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும்.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் கட்சி, நிறம் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாது நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.