இந்திய வெளிவிவகார மற்றும் நிதி அமைச்சர்களுடன் மங்கள முக்கிய பேச்சு

Report Print Ajith Ajith in அரசியல்

நிதி அமைச்சர் மங்கள சமரவீர, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்படும் பொருளாதார திட்டங்கள் குறித்து இந்திய நிதி அமைச்சருடன் பேச்சு நடத்தியதாக மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.