உலங்கு வானூர்தியில் சென்று வாக்களித்த அமைச்சர்!

Report Print Thirumal Thirumal in அரசியல்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் வாக்களித்துள்ளனர்.

அமைச்சர் பழனி திகாம்பரம் வட்டகொடை, மடக்கும்புரையில் உள்ள கலாபூவணம் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் கொத்மலை வேவண்டன் தமிழ் வித்தியாலயத்தில் வாக்களித்துள்ளார்.

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் 504 வாக்களிப்பு நிலையங்களிலும் மக்கள் சென்று வாக்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜராம் ஆகியோரும் நுவரெலியா நல்லாயினபற்று மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் வாக்களித்துள்ளனர்.

இதேவேளை, அமைச்சர் பழனி திகாம்பரம் உலங்கு வானூர்தியில் சென்று வாக்களித்துள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.