அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்: மீண்டும் கூறுகின்றார் சுமந்திரன்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இங்கும் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய அத்தியாவசியமான தேவை எழுந்திருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே இந்த கோரிக்கையை நாங்கள் வெளியிட்டிருந்தோம். தற்போது மீண்டும் கூறுகின்றோம்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே தெற்கில் உள்ள அரசியல் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என நான் கூறினேன்.

அந்த கருத்து சூட்டோடு சூடாக கூறிய கருத்தாக இருக்கலாம். ஆனால் மிக அத்தியாவசியமான கருத்தாக இருக்கின்றது.

நான் அப்போது கூறியிருந்த கருத்துக்கு ஆதரவாக பொது அமைப்புக்கள் மற்றும் யாழ்.ஆயர் போன்றோர் கருத்துக்கள் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

இதேபோல் உள்ளூராட்சி சபைகளில் எந்த கட்சியும் அறுதி பெரும்பான்மை பெறாத நிலையில் அதிகபடியான ஆசனங்களை பெற்ற கட்சிகள் ஆட்சியமைக்கவும், அவர்களுடைய மக்கள் நலன்சார் செயற்பாடுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடையாக இருக்காது என்றார்.