மோசடிகளை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமனம்!

Report Print Murali Murali in அரசியல்

ஶ்ரீ லங்கன் விமான சேவை, ஶ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களின் முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

குறித்த நிறுவனங்களில் 2006ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் திகதி முதல் 2018 ஜனவரி 31 ஆம் திகதி வரை இடம்பெற்றதாகக் கருதப்படும் மோசடிகளைக் கண்டறியும் நோக்கில் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிவைத்தார்.

இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன செயற்படவுள்ளார்.

ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஈ.ஏ.ஜீ.ஆர். அமரசேக்கர, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் எம்.டீ.ஏ. ஹரல்ட் மற்றும் இலங்கை கணக்கீட்டு, கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்பு சபையின் பணி்ப்பாளர் நாயகம் டபிளியு.ஜே.கே. கீகனகே ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக செயற்படுவர்.