சந்திரிக்கா நாட்டிலிருந்து தப்பிச்செல்லவில்லை!

Report Print Murali Murali in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நாட்டிலிருந்த தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்து பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் சந்திரிக்கா குமாரதுங்க கலந்துகொண்ட புகைப்படங்கள் சிலவற்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தனது அதிகாரமிக்க அத்தனகல்ல பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க படுதோல்வி அடைந்துள்ளார்.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் கூட்டணிக்கு கிடைத்த தோல்வியினால் விரக்தியடைந்த அவர், பிரித்தானியா நோக்கி பயணமாகி உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

அத்தனகல்ல பிரதேச சபையின் 45.91% வீத வெற்றியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.