நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள ஐ.தே.கட்சி தயார்

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக்கட்சி தயாராக இருப்பதாக ராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இரத்மலானை பிரதேசத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என கட்சியில் உள்ள பெரும்பாலானோர் கருதினாலும் கட்சித் தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவி ஆகிய வெவ்வேறானவை எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.