மொறவெவ பிரதேச சபையின் கன்னியமர்வு

Report Print Gokulan Gokulan in அரசியல்

மொறவெவ பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிட்ட பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை மொறவெவ பிரதேச சபைக்கான முதலாவது அமர்வு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், தலைவர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக ஜகத் வேரகொட ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டதுடன், வாக்கெடுப்பும் நடைபெற்றது.

தலைவர் தெரிவில் மேலதிக இரண்டு வாக்குகளால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி தெரிவு செய்யப்பட்டதுடன், உப தவிசாளராக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த சாலிய ரத்னாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, மொறவெவ பிரதேச சபைக்கு தெரிவாகியிருந்த 16 உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த பிரதேச சபையை சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததாகவும், பலத்த பாதுகாப்புடன் தலைவர் தெரிவு நடைபெற்றதாகவுத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சி ஆகியவை இணைந்து மொறவெவ பிரதேச சபையின் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.