உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இந்த தருணத்தில் நாட்டுக்கு ஸ்திரமான அரசாங்கமொன்றின் அவசியம் எழுந்துள்ளது. நாட்டின் ஸ்திரமற்ற நிலையினால் வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சரிவடைந்துள்ளன.
முதலீட்டாளர்களை மீள அழைக்க வேண்டுமாயின் ஸ்திரமான அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டியது அவசியமானது.
ஸ்திரமான அரசாங்கமொன்று இல்லாத காரணத்தினால் மக்களுக்கு சேவையாற்ற முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
அரசாங்கம் மக்களை எதிர்கொள்ள தைரியம் இருந்தால் பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.