இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றது: நெல்லையில் விக்னேஸ்வரன்

Report Print Shalini in அரசியல்

இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு பல நன்மைகள் செய்தாலும், இன்னும் உதவிகளை செய்யக் கூடிய வாய்ப்பு இந்தியாவுக்கு இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று காலை நெல்லைக்கு சென்றுள்ளார்.

அங்கு நெல்லையப்பர் கோவில் அர்ச்சகர் மணி பட்டர் தலைமையில் முதலமைச்சருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்தமருத்துவ கல்லூரியில் உள்ள அகத்தியர் கோவிலில் நடைபெற்ற பூஜையிலும் அவர் கலந்துகொண்டார்.

இதன் பின் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த முதலமைச்சர்,

“இலங்கை தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்வது ஒன்றும் பெரிய வி‌ஷயம் அல்ல.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் தற்போதைய நிலை குறித்து இந்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் வாழ்வு மேம்பட இன்னும் அதிகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு பல நன்மைகள் செய்தாலும் இன்னும் கூடுதல் உதவிகள் செய்ய கூடிய வாய்ப்பு அரசுக்கு இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.