முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விவகாரம்: ஜனாதிபதியை நேரில் சந்தித்த விஜயகலா

Report Print Shalini in அரசியல்

இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று நேரில் சென்று சந்தித்து இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

நினைவுத் தூபியை அமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தாம் இது தொடர்பில் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விஜயகலா மகேஸ்வரன் இது குறித்து ஜனாதிபதியிடம் கடிதமொன்றையும் கையளித்துள்ளார்.

இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இறுதி யுத்­தத்தின்போது பெருந்­தொ­கை­யான அப்­பா­வி­மக்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர். கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம், மன்னார், முல்­லைத்­தீவு, வவு­னியா ஆகியமாவட்­டங்­களை சேர்ந்த மக்கள் இறுதி யுத்­தத்தின்போது முள்­ளி­வாய்க்­காலில் பலி­யா­கினர்.

படைத்­த­ரப்­பி­ன­ருக்கும் புலி­க­ளுக்­கு­மி­டை­யி­லான பரஸ்­பர மோத­லிலும் தாக்­கு­தல்­க­ளிலும் இத்­த­கைய உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­டி­ருந்­தன.

2009ஆம் ஆண்டு இடம்­பெற்ற இந்த உயி­ரி­ழப்­புக்­களை நினை­வு­கூரும் வகையில் முள்­ளி­வாய்க்­காலில் நினை­வேந்தல் நிகழ்வு நடத்­தப்­பட்டு வரு­கின்­றது.

2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­த­தை­ய­டுத்து மே மாதம் சுதந்­தி­ர­மான முறையில் முள்­ளி­வாய்க்­காலில் நினை­வேந்தல் நிகழ்வு நடத்­தப்­பட்­டது.

இவ்­வாறு யுத்­தத்தில் உயி­ரி­ழந்த உற­வு­களை நினை­வு­கூரும் வகையில் முள்­ளி­வாய்க்­காலில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்படவேண்டியது அவசியமான தாகும். இதற்கான தேவையான நடவடிக் கைகளை விரைந்து எடுக்கவேண்டும் என்று தங்களிடம் கோருகின்றேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.