தண்ணீர்ப் பிரச்சினை: வெளிநடப்புச் செய்த பிரதேச சபை உறுப்பினர்கள்

Report Print Kumar in அரசியல்

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்கள் இன்று பிற்பகல் சபை நடவடிக்கையினை புறக்கணித்துள்ளனர்.

மண்முனைப்பற்று பிரதேச சபையின் நான்காவது அமர்வு இன்று காலை சபையின் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மண்முனைப் பற்றில் உள்ள ஆலயங்களின் உற்சவங்களின்போது நீர் வழங்குவது தொடர்பான பிரேரணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களினால் கொண்டு வரப்பட்டது.

ஆலயங்களுக்கு தண்ணீர் வழங்குவதினால் பிரதேச சபைக்கு நஸ்டம் ஏற்படும் என்பது தொடர்பாக தவிசாளரினால் உரையாற்றப்பட்டது.

அத்துடன் அண்மையில் ஆலய உற்சவம் ஒன்றின்போது நீர் வழங்க பிரதேச சபை மறுப்பு தெரிவித்தமை தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்களினால் இங்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

குறித்த ஆலயம் முஸ்லிம்களுக்கு சார்பாக செயற்படுவதாகவும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் தான் அதிருப்தி அடைவதாகவும் தவிசாளரினால் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஐந்து முஸ்லிம் உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஒரு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.