![]() |
|
நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு மீளவும் நீதிமன்றம் அழைப்பாணை
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 03:32.50 PM GMT ]
நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு மீளவும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் சமால் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதவான்கள் உத்தரவிட்டுள்ளனர். எதிர்வரும் 15ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதவான்களான காமினி அமரதுங்க, கே.ஸ்ரீபவன் மற்றும் பிரியசாத் டெப் ஆகிய நீதவான்கள் மேன்முறையீட்டு நீதிமன்றின் சட்ட வரைவிலக்கணத்தை அறிவித்துள்ளனர். |
| Copyright (c) 2008-13 TamilWin.com, All rights reserved. |