| புலிகளின் கப்பல், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது |
| [ சனிக்கிழமை, 26 டிசெம்பர் 2009, 04:22.57 PM GMT +05:30 ] |
 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள, “பிரின்ஸஸ் கிரிஸ்டினா” என்னும் கப்பல் நாளை ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
|
கொழும்பு, காலிமுகத்திடலில், இந்த கப்பல் மக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கப்பலுடன், இலங்கை கடற்படையின் கரையோர பாதுகாப்புக் கப்பலான சயூரா கப்பலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| முன்செல்ல |
|
|