| சட்டவிரோத பிரவேசத்தை தடுக்க அவுஸ்திரேலியா - இந்தோனேசியா உடன்படிக்கை |
| [ வியாழக்கிழமை, 11 மார்ச் 2010, 08:25.13 AM GMT +05:30 ] |
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல் சம்பவங்கள் மேலும் இடம்பெறாமல் தடுப்பதற்கு, அவுஸ்திரேலியா - இந்தோனேசியா நாடுகளிடையே ஓர் புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. |
ஆட்கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக, அண்மையில் அவுஸ்திரேலியா வந்திருந்த இந்தோனேசிய ஜனாதிபதி யொதோயோனாவுக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. எனினும் இப்புதிய உடன்படிக்கை இரகசியமாக பேணப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இதனை மக்களுக்கு வெளிப்படுத்தும் எண்ணம் உள்ளதா என செய்தியாளர்கள், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்நாடுகளிடையே ஸ்டீபன் ஸ்மித்திடம் வினவினர்.
இதன் போது கருத்து தெரிவித்த அவர், இந்த உடன்படிக்கை வெளியிடப்படும் பட்டசத்தில் அது ஆட்கடத்தல் காரர்களுக்கு சாதகமாக அமைந்து விடும் என்றார்.
எனவே இது இரகசியமாக பேணப்படுவதன் ஊடாகவே ஆட்கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
|
| முன்செல்ல |
|
|