| Photo
|
|
| இலங்கையில் போர்நிறுத்தக்கோரி தமிழக முதல்வர் கால வரையறையற்ற உண்ணாநிலைப்போராட்டம் |
| [ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 03:55.33 AM GMT +05:30 ] | |
இலங்கயில் உடனடியாக போர் நிறுத்தம் எற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.கருணாநிதி கால வரையறையற்ற உண்ணாநிலை போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளார். |
சென்னையிலுள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு முன்னால் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை மு.கருணாநிதி ஆரம்பித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இன்னொரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையினால் உயிர் நீத்ததாக வரலாறு என்னை பற்றி பேசட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ச் சகோதரர்களுக்காக தாம் இந்தத் தியாகத்தை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.


|
| முன்செல்ல |
|
|